மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக தூய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க, பொதுமக்களும் மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .
அதனைத் தொடர்ந்து அக்னி தீர்த்த கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
இதில் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: ‘எனது பிள்ளை வீடு திரும்புவானா?’ - ஏங்கும் தாய்..!