முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வெண்ணீர் வாய்க்கால், கடம்பன்குளம், கடலாடி நகர் பகுதி, இளஞ்செம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, எவ்வித அரசு அனுமதியும் பெறாமல் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சுவரொட்டிகள் ஒட்டியும் தேர்தல் விதிமுறைகளை மீறி, இரவு 10 மணிக்கு மேலும் பரப்புரையில் ஈடுபட்ட 7 பேர் மீது தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு