தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே உள்ள அரசரடி வண்டல் என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த வாசு என்பவரின் வாகனத்தில் சோதனை நடத்தியபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.19லட்சத்து 93ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் திமுக நிர்வாகி என்பது தெரியவந்தது. 10 லட்சத்துக்கு மேல் இருந்ததால், முறையாக வருமானவரித் துறையினர் விசாரித்த பின்பு, பணம் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.