ராமநாதபுரம்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இலங்கைக் கடல் பகுதியில் நீடித்த காற்று சுழற்சி, தற்பொழுது மெதுவாகக் குமரிக் கடலை நோக்கி நகர்கிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் இன்று (டிச.17) காலை முதலே மழை பெய்யத் தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாகவும், கன எச்சரிக்கை உள்ளதாலும், நாளை (18.12.2023) ராமநாதபுரம் மாவட்டப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விடுமுறை தினத்தை முன்னிட்டு ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!