ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர், திருப்புல்லாணி, கமுதி ஆகிய மூன்று ஒன்றியங்களில் தலைவா்களை தீா்மானிக்கும் சக்திகளாக சுயேச்சைகள் இருந்தனர். இதனால் இந்த ஒன்றியங்கள் சற்று பதற்றமாக காணப்பட்டன.
இந்நிலையில், அங்கு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், ராமநாதபுரம், திருவாடானை, ஆா்.எஸ்.மங்கலம், போகலூா், கமுதி, மண்டபம், திருப்புல்லாணி ஆகிய 7 ஒன்றியங்களில் திமுகவும், பரமக்குடி, நயினாா்கோவில், முதுகுளத்தூா், கடலாடி ஆகிய 4 ஒன்றியங்களை அதிமுகவும் கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக திமுக திசைவீரன், துணைத் தலைவராக காங்கிரஸ் வேலுச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பெருவாரியான இடங்களில் மறைமுகத் தேர்தல் சுமூகமாக முடிந்தது.
மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மணிகண்டன் சென்றதால் அதனை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் போகலூர் ஒன்றியத்தில் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் எனக்கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 11 ஒன்றியங்களில் 7ல் திமுக வெற்றி பெற்றதன் மூலம் ராமநாதபுரத்தை திமுக கைப்பற்றியது.
இதையும் படிங்க: ஆதாரமாக மரக்கட்டையைக் காட்டிய காவல்துறை - அன்பழகனுக்கு புழல்!