ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கொ. வீரராகவ ராவ், வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராமநாதபுரம் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 1369 பாகத்தில் 5,59,421 ஆண் வாக்காளர்கள், 5,60,959 பெண் வாக்காளர்கள், 70 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,20,450 வாக்காளர்கள் உள்ளனர்.
இதற்கு முன்பாக 2019ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 11,22,441 வாக்காளர்கள் இருந்தனர். மார்ச் 27ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் சுருக்கத் திருத்தத்தின் மூலம் 4,186 ஆண் வாக்காளர்களும் 4,553 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 8,739 நபர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,256 ஆண் வாக்காளர்களும் 5,473 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 10,730 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், உதவி வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைப்புகள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். பொதுமக்கள் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு தங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்” என்றார்.
இதையும் படிங்க: பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமனம்!