தமிழ்நாட்டில் இன்று (ஆக. 20) புதிதாக 5,986 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 49 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,199ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, 3,623 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ள நிலையில், மீதமுள்ள 482 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 94 பேர் உயிரிழந்துள்ளனர்.