ETV Bharat / state

“மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோச்சு” - முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு! - cm stalin critizises modi

CM MK Stalin in Ramanathapuram: ‘மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோச்சு' என ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோச்சு
மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோச்சு
author img

By

Published : Aug 17, 2023, 10:21 PM IST

“மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோச்சு” - விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்

ராமநாதபுரம்: தென் மண்டல BLA-2 வாக்குசாவடி முகவர் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) பங்கேற்றார். அப்போது 2014இல் மோடி பல வடைகளை சுட்டார், ஆனால் தேர்தல் முடிந்ததும் வடைகள் ஊசிப்போய்விட்டன” என காட்டமாக விமர்சித்தார்.

இதில் பேசிய முதலமைச்சர் பேசியது, ““பகையெனில் கூற்றம் வரினும் தொலையான்” என்ற கலித்தொகைக்கு இலக்கணமாக, வீரம் மிகுந்த இந்த ராமநாதபுரம் மண்ணில் கழக தீரர்களான நாம் கூடியிருக்கிறோம்.சேது மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கும் - இறையியல் வளர்ச்சிக்கும் ஆற்றிய தொண்டு காலத்தால் அழிக்க முடியாதது; மறக்க முடியாதது.

இந்த மண்ணைக் காக்கும் பெரும் போரில் பன்னிரண்டே வயதான இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஈடுபட்டார். தன்னாட்சி பெற்ற நாடாக இருந்த இந்த சேதுச்சீமையின் உரிமையைப் பறித்தவர்களையும், தன்னைத் திருச்சி சிறையில் அடைத்தவர்களையும் பழிவாங்க சேது மன்னர் திட்டமிட்டார். சிறையில் இருந்தபடியே மக்களை எழுச்சி பெற வைத்தார். மன்னரின் கட்டளையை மனதில் வைத்து, ஒரு பெரும் போரையே மக்கள் நடத்தினார்கள். ஒரு நாள் - இரு நாள் அல்ல, 42 நாட்கள் விடாமல் அந்தப் பெரும் போரைச் செய்தார்கள்.

ஒரு காலத்தில் ‘தண்ணி இல்லாத காடு’ என்று சொல்லப்பட்ட இந்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு, இந்த அடியேன் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான், காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தோம். வேளாண் வளர்ச்சிக்காக பார்த்திபனூரில் மதகு அணை கட்டினோம். முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் கோரிக்கையை அடுத்து 500 கிலோ மீட்டர் கிராம சாலையை நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் வகையில் மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தினோம்.

1)தேவிபட்டினம் அண்ணா அரசு பொறியியல் கல்லூரி!
2)ஆரம்ப சுகாதார நிலையங்கள்!
3)அரசு மருத்துவமனை!
4)சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மாவட்டத்தில் 5 ஆயிரம் சுனாமி மறுவாழ்வு குடியிருப்புகள்!
5)உயர்மட்டப் பாலங்கள்!
6)பாலைவனப் பூங்கா – என்று, நம்முடைய அரசு செய்த பல திட்டங்களால்தான் பின்தங்கிய மாவட்டம், இன்றைக்கு முன்னுக்கு வந்திருக்கிறது.

18 ஆண்டுகள் ஓடாமல் இருந்த இராமநாதபுரம் இராமநாதசுவாமி திருக்கோயில் தங்கத்தேரை ஓடவைத்தது நம்முடைய ஆட்சிதான்.
தென் பாண்டி மண்டலத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சொன்னவுடனே இராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்தோம். அது சரியான முடிவுதான் என்று இங்கு கூடியிருக்கும் நீங்கள் நிரூபிக்கிறீர்கள். இது போலவே தேர்தல் களத்திலும் சரியான முடிவுகள் கிடைக்கச் செய்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நம்மையெல்லாம் ‘உடன்பிறப்பே’ என்று அழைத்து ஒரு குடும்பம் ஆக்கிய தலைவர் கலைஞரின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக நாம் கூடியிருக்கிறோம். தமிழ்நாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆள வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கனவு கண்டார். அந்தக் கனவை நிறைவேற்றிவிட்டோம்! தமிழ்நாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் நிரந்தரமாக ஆள வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கனவு கண்டார். அந்தக் கனவையும் நிச்சயம் நிறைவேற்றியே காட்டுவோம்.

திராவிட இயக்கத்தின் கொள்கைகள் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும், நம்முடைய சீர்திருத்த சட்டங்கள் இந்தியாவின் சட்டங்களாக மாற வேண்டும் என்று தலைவர் கலைஞர் நினைத்தார். அந்தக் கனவையும் நிறைவேற்றிக் காட்டுகிற காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கான மாநாடுதான் இது! அதற்கான தளபதிகள்தான் நீங்கள்!

கடந்த 22.03.2023 அன்று என்னுடைய தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அப்போது இரண்டு முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றினோம். தலைவர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது முதல் தீர்மானம். தமிழ்நாடு முழுவதும் முழுமையாக பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம். உறுப்பினர்களை சேர்க்கிற பணி வெற்றிகரமாக முடிந்தது.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 2 கோடித் தொண்டர்கள் கொண்ட நம்முடைய கழகத்தில் நீங்கள் 68 ஆயிரத்தில் ஒருவர்! வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமைக் கழகத்தால் முழுமையாக சரிபார்க்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கான பயிற்சியை உடனே தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பாசறைக் கூட்டம், கடந்த ஜூலை 26 அன்று தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் நடந்தது. கழகத்தின் முதன்மைச் செயலாளர் நேரு அவர்களின் முயற்சியால் வழக்கம் போல் பிரம்மாண்டமாக நடந்தது.அடுத்ததாக மிகப் பிரமாண்டமாக இப்போது தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் இராமநாதபுரத்தில் நடக்கிறது. 19 மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான 16 ஆயிரத்து 978 பேர் இங்கு வந்திருக்கிறீர்கள்.

கடந்த சில மாதங்களாகத் தலைமைக் கழகத்தில் இருந்து உங்களையெல்லாம் அழைத்துப் பேசி உங்களைப் பற்றிய முழுமையான விவரங்களை வாங்கச் சொல்லியிருந்தேன். அப்படி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பலரை மாற்றவும் சொல்லியிருந்தேன். மாற்றப்பட்டவர்களுக்குப் பதிலாகப் புதியவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களைப் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு பலகட்ட ஆய்வுகளுக்குப் பின்புதான் ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்’ என்ற அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அட்டையை பெற்ற தென் மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மட்டும் இங்கு முதல் கட்டமாக அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கான வகுப்புகள் காலை முதலே நடந்து வருகிறது.

வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில் தலைசிறந்த வழக்கறிஞரும் - நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ அவர்களும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து செயல் வீரர் - தம்பி ஐ.பி. செந்தில்குமார் அவர்களும்,சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் என்ற தலைப்பில் இளம் பேச்சாளர் தம்பி மதுரை பாலா அவர்களும் - உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

கழகத்தின் வரலாறு – அடிப்படைக் கொள்கைகள் – திராவிட இயக்கத்தின் கோட்பாடுகள் – நவீன தமிழ்நாட்டை உருவாக்க நாம் எடுத்த முயற்சிகள் – திராவிட மாடல் ஆட்சி ஆகியவை குறித்த அடிப்படை தகவல்களைக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்றத்திலும் கர்ஜித்து வரும் அருமைத் தங்கை கனிமொழி அவர்களும், திராவிடப் பள்ளியை நடத்தும் நமது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் சுப.வீ அவர்களும் – உங்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார்கள்.

இவர்கள் மூலமாக கொள்கை வழிகாட்டுதலும் – தேர்தல் பயிற்சியும் வழங்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் மனதில் வைத்து நீங்கள் செயல்பட வேண்டும். இதையெல்லாம் இந்தத் தேர்தலுக்கு மட்டுமல்ல, எந்தத் தேர்தலுக்கும் பயன்படும் பயிற்சி! 1967, 1971, 1989, 1996, 2006 - ஆகிய ஐந்து முறை ஆட்சியைக் கைப்பற்றித் தமிழ்நாட்டை ஆண்ட இயக்கம் நமது திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆறாவது முறையாக ஆட்சி நடத்தி வருகிறோம்.

அதேபோல் இந்தியாவில் – ஒன்றிய ஆட்சியில் பல்வேறு தேர்தல்களில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்த இயக்கம், நம்முடைய இயக்கம். பிரதமர்களை - குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம், நம்முடைய இயக்கம். 1989 - பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவை, 1996 - பிரதமர் தேவகவுடா அமைச்சரவை, 1997 - பிரதமர் குஜ்ரால் அமைச்சரவை, 1999 - பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவை.

2004 மற்றும் 2009-இல் – பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவை என்று ஒன்றிய அளவிலான கூட்டணி ஆட்சிகளில் பங்கெடுத்து தமிழ்நாட்டுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். இந்திய அளவில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட அடித்தளம் அமைத்தோம்.
இதோ, இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை ஆற்றக் காலம் நம்மை அழைக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இத்தகைய முக்கியமான தேர்தலுக்குத்தான் நீங்கள் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களாக ஆகியிருக்கிறீர்கள்.

கழகத்தின் வாக்குச்சாவடிப் பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கும் நீங்கள்தான் பொறுப்பாளர்! நாற்பதும் நமதே - நாடும் நமதே - என்று நான் சொல்வது உங்கள் மேல் வைத்திருக்கிற நம்பிக்கையில்தான்.

இன்று முதல் கழகத் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும்! வெற்றி ஒன்றே உங்கள் இலக்காக அமைய வேண்டும். அதற்கான சரியான வழிமுறைகளில் நீங்கள் போக வேண்டும். உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது.வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பதுதான் உங்களின் முதல் பணி. இரண்டாவது பணி, உங்கள் வாக்குச் சாவடிக்கு உரிய வாக்காளர்கள் விவரங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா, போலி வாக்காளர்கள் இருக்கிறார்களா, இறந்தவர்கள் பெயர் எல்லாம் நீக்கப்பட்டுவிட்டதா என்று முழுமையாகச் சரிபார்க்க வேண்டும். முறையான வாக்காளரை நம்மை நோக்கி ஈர்க்க வேண்டும்.

வாக்காளர்களைச் சந்தித்துப் பரப்புரையில் ஈடுபடுவதும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து எடுத்து செல்வதும் உங்களின் மூன்றாவது பணி. வாக்குப்பதிவு நடக்கும்போது வாக்காளர்களை பூத்துக்கு வரவைப்பது நான்காவது முக்கியக் கடமை.
முதலில், உங்கள் பூத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுவதுமாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரிப் படிவத்தை இப்போது உங்களுக்குக் கொடுத்திருக்கிறோம். தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு விரைவில் உங்களுக்கு அது வந்து சேரும். வாக்காளர் பெயர், வயது, அவர்கள் குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்கிற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும்.

உங்கள் வாக்குச்சாவடியில் 250 குடும்பங்கள் இருக்கும் என்றால் அந்தக் குடும்பங்களில் ஒருவராக நீங்கள் மாற வேண்டும். அது எப்படி மாற முடியும்? தினமும் ஒரு மணி நேரத்தைக் கழகத்துக்காக, பூத் வேலைக்காக ஒதுக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியாதா? ஒதுக்குவீர்களா? அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதுமாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இன்றைக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறோம். அதைப் படித்துப் பார்த்தாலே எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

யாருக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகையில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இப்படி அவரவர் தேவையைக் கண்டுபிடித்து அதை நிறைவேற்றி கொடுங்கள். இதைச் செய்து தருவதற்கு உங்கள் பகுதி ஒன்றிய – நகர - பேரூர் கழகச் செயலாளர்களையோ, சட்டமன்ற உறுப்பினர்களையோ. அமைச்சர்களையோ அணுகுங்கள்.

இவ்வாறு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்று அமைச்சர்களிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நான் தொடர்ந்து வலியுறுத்துகிறேன். இனியும் சொல்லிட்டுக்கொண்டுதான் இருப்பேன். அதை நிறைவேற்றாதவர்கள்மீது நான் உரிய நடவடிக்கை நிச்சயமாக வரும் காலக்கட்டத்தில் எடுப்பேன். நியாயமான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும். அதனால், நீங்கள் கவலைப்படாமல் நான் சொன்ன வேலையில் கவனம் செலுத்துங்கள்.

ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று பேசியிருப்பீர்கள். சில வீடுகளில் மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். சில வீடுகளில் அதை எதிர்பார்க்க முடியாது. அதற்காக நாம் விட்டுடக் கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகை மாறாமல் அவர்களைத் தேடி செல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்கள் இருக்க மாட்டார்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நாம் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் பயனடையும் திட்டங்களாகப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு நம்முடைய ஆட்சி மேல் நம்பிக்கை இருக்கிறது. கோடிக்கணக்கான மகளிருக்கு பயனளிக்கும் திட்டம்தான் பேருந்தில் கட்டணமில்லா ‘விடியல் பயணம்’!,
ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் கலைஞர் பெயரிலான உரிமைத் தொகையை வரும் செப்டம்பர் மாதம், அண்ணா பிறந்தநாள் முதல் மாதாமாதம் வாங்கப் போகிறார்கள்.

30 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டப் பயனாளிகள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித் தொகையை 1200-ஆக ஆக்கி இருக்கிறோம். லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால் பசியில்லாமல் படிக்கிறார்கள்.13 லட்சம் குடும்பங்களின் நகைக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். நான் முதல்வன் திட்டத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது.

இந்தத் திட்டங்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். நமக்கு எதிராக அவதூறுகளையும், பொய்ச் செய்திகளையும் பரப்ப ஒரு சிறுநரிக் கூட்டம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. பொய்களுக்கு ஆயுள் மிகவும் குறைவு. அவர்கள் பொய்யையே சொல்லிக்கொண்டு இருக்கட்டும். நாம் திரும்பத் திரும்ப நம்முடைய திட்டங்களை பற்றிப் பேசுவோம். இதிலேயே எதிரிகள் பரப்புகிற அவதூறுகள் சுக்குநூறாக நொறுங்கிவிடும்.

இப்போது பரப்புரை பாணியே பெரிய அளவில் மாறிவிட்டது. சமூக ஊடகங்கள் சிறப்பான பரப்புரைக் களங்களாக ஆகிவிட்டது. நீங்கள் எல்லோரும் சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்க வேண்டும். அதை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அ.தி.மு.க. – பா.ஜ.க.-வினர் எதையுமே செய்யாமல் எல்லாவற்றையும் செய்த மாதிரி விளம்பரம் செய்து கொள்வார்கள். நாம் நம்முடைய சாதனைகளை மட்டும் பேசினாலே போதும்.முன்பெல்லாம் டீக்கடையிலும், சலூனிலும் பேசப்பட்ட அரசியல் விவகாரங்கள், இப்போது சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. எனவே நீங்கள் ஒவ்வொருவரும் அதில் தீவிரமாக செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: parliament election 2024: வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு 2ம் கட்ட பயிற்சி பாசறை: அனல் பறக்கும் தேர்தல் களம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.