ஜனவரி 18ஆம் தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படை கப்பல் மோதியதால் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
தமிழ்நாடு கடலோர காவல் படையினர் வழக்கை விசாரித்துவந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு கோட்டைப்பட்டினம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை அத்துமீறி தாக்கியதால்தான் மீனவர்கள் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறிய நிலையில் இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்கக் கோரி மீனவர்களின் உறவினர்கள் காத்திருப்புப் போராட்டம்