ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் தூக்கு பாலம் திறக்கப்பட்டு, அதன் தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு பகுதிக்கு கப்பல்கள் கடத்து சென்றன.
அப்போது பாலத்தை கடக்க முயன்ற இழுவை கப்பல் (பார்ஜர் சரக்கு கப்பல்) ஒன்று காற்றோட்டம் காரணமாக வழிமாறியது. இதனால் பின்னே விசைப்படகு சற்று தடுமாறியது. இதற்கிடையில் இழுவை கப்பல் பாலத்தின் கான்கிரிட் சுவர் மீது மோதி பலத்த சத்தம் எழுப்பியது.
தூக்கு பாலம் திறக்க அப்பகுதி மீனவர்களை அழைத்து பாலத்தை மேலே தூக்குவது வழக்கம். பாலத்தில் பர்ஜர் கப்பல் மோதி பலத்த சத்தம் கேட்டதும், பாலத்தை இயக்க வந்தவர்கள் சிதறி ஓடினர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பானது.
விசைப்படகை ஓட்டிச் சென்ற நபரின் சாமர்த்தியத்தால் பாலத்திற்கு எந்த சேதமும் இல்லை என்று பாலத்தை மேற்பார்வை செய்யும் பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாம்பன் பாலத்தில் ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில்கள் ராமேஸ்வரம்வரை இயக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் புதிய பாலம் கட்டுமான பணிக்கு வந்த பர்ஜர் சரக்கு கப்பல் மோதி சேதமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை அண்ணா சாலை கட்டடத்தில் தீ விபத்து