தமிழ்நாடு அரசு கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது நோயின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து பல்வேறு தளர்வுகளை அறிவித்துவரும் நிலையில், நாளை (ஜூன் 14) முதல் பல்வேறு கடைகள் திறப்பதற்கு அரசு சார்பில் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
இதோடு சேர்த்து நோய்த்தொற்றின் தாக்கம் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் அரசு மதுபானக் கடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்து பாஜக சார்பில் இன்று (ஜூன் 13) தமிழ்நாடு முழுவதும் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கீழக்கரை, திருப்புல்லாணி, சிக்கல், முதுகுளத்தூர், கமுதி என 45 இடங்களில் 228 வீடுகளில் மதுக்கடை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் நகர்ப்பகுதியில் மாநில குழு உறுப்பினர் குப்புராமு அவரின் இல்லம் முன்பு பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.