ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டியைச் சேர்ந்தவர் சின்னையா மகன் ஈஸ்வரன், இவர் இதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான, சோலைராஜ், சத்யா ஆகியோருடன் தனது இரு சக்கர வாகனத்தில் பார்த்திபனூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று விட்டு இரவு அபிராமம் வழியாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.
அப்போது வழிமறிச்சான் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரம் உள்ள பயணிகள் நிழற்குடையில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஈஸ்வரன், சோலைராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த சத்யா மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த வந்த அபிராமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: