ETV Bharat / state

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, திமுக சார்பில் மரியாதை! - இமானுவேல் சேகரன் நினைவு தினம்

தியாகி இமானுவேல் சேகரனின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் திமுக, அதிமுக சார்பாக அவரது உருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செய்யப்பட்டது.

aiadmk-and-dmk-pay-homage-on-the-occasion-of-tiyagi-emanuel-sekaran-memorial-day

author img

By

Published : Sep 11, 2020, 2:46 PM IST

தியாகி இமானுவேல் சேகரனின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவரது உருவப்படத்திற்கு திமுக, அதிமுக கட்சியினர் மலர்த்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அனுமதி பெற்ற அரசியல் கட்சியினர் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் அதிமுக சார்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அதேபோல், திமுக சார்பில் ராமநாதபுரம் நாடளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, முன்னாள் அமைச்சர்கள் தமிழரசி, சுப.தங்கவேலன் உள்ளிட்டோர் இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்

அதேபோல் பெரம்பலூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகே இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு புதிய தமிழகம் கட்சியினர் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல் திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில், தியாகி இமானுவேல் சேகரின் 63ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க:சென்னையில் பிரபல மாலில் பாலியல் தொழில் நடத்தியவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.