ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதற்கிடையில் இன்று அம்மாவட்டத்தில் ஒரேநாளில் 52 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதன்மூலம் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,826 உயர்ந்துள்ளது.
மேலும் 60 வயது மூதாட்டி மற்றும் இரண்டு முதியவர்கள் என மொத்தம் மூன்று பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அம்மாவட்டத்தில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.