ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் சட்டவிரோதமாக மதுபான விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். சட்டத்திற்கு புறம்பாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட மாவட்ட காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 16 நபர்களைக் கைது செய்தனர். தொடந்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:சென்னை வந்த மீட்பு விமானத்தில் தங்கக் கடத்தல்: இருவர் கைது