ETV Bharat / state

அமைச்சர் விஜயபாஸ்கரின் மேற்பார்வையில் நடந்த ஜல்லிக்கட்டு - Vadamalapur Jallikattu

புதுக்கோட்டை: வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில் 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

Vadamalapur Jallikattu
Vadamalapur Jallikattu
author img

By

Published : Jan 18, 2020, 11:50 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் கருப்பர் மற்றும் பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்றப்பிறகு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் வீரர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டிய காளைகளுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு

காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க விழா கமிட்டி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு தொடங்குவது முன் சாரல் மழை பெய்ததால் மழையையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்தனர்.

இதையும் படிங்க:

'பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தவேண்டும்' - மு.க. ஸ்டாலின்

Intro:Body:
புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காளைகளை அவிழ்த்து விட்டு தொடங்கி வைத்தார்.

இதில் 800 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் கருப்பர் மற்றும் பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வடமலாப்பூரில் உள்ள கோவில் திடலில் நடைபெற்றது.ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காளைகளை அவிழ்த்துவிட்டு தொடங்கிவைத்தார் முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்றது.இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி தஞ்சாவூர் மதுரை திண்டுக்கல் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன. அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினர சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடின காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் எவர்சில்வர் சட்டி, குக்கர், மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு தொடங்குவது முன் சாரல் மழை பெய்ததால் மழையையும் பொருட்படுத்தாமல் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு நோய் கண்டு ரசித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.