புதுக்கோட்டை: விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பகுதியில், மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரை மீட்ட பொதுமக்கள், அவர்களை கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதேநேரம் இந்த கோர விபத்தில் 100 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் இந்த இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த பயணிகள், அந்த வழியாகச் சென்ற வேறு பேருந்துக்கு மாற்றம் செய்யப்பட்டு பயணம் செய்தனர்.
மேலும், இந்த பகுதியில் தொடர்ந்து விபத்து நிகழ்வதால், காவல் துறையினர் பேரி கார்டுகள் அமைத்தும், சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து