ETV Bharat / state

"தனியார் மருத்துவமனைகளை நம்ப வேண்டாம்; சுகப்பிரசவங்களை கூட அறுவை சிகிச்சை செய்கின்றனர்" - அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேச்சு

Minister S.Regupathy: கர்ப்பிணிகள் தனியார் மருத்துவமனைகளை நம்ப வேண்டாம் எனவும் தனியார் மருத்துவமனைகளில் கட்டடங்கள் மட்டும் தான் நன்றாக உள்ளது என்றும் புதுக்கோட்டையில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 10:23 AM IST

அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு, 273 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கி உணவு பரிமாறி, ஆசிர்வாதம் செய்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரகுபதி, "பெண்மைக்கு எத்தனையோ சிறப்புகள் இருந்தாலும் அனைத்திற்கும் உச்சமாய் இருப்பது தாய்மை. அதன்படி பாதுகாப்பான தாய்மைக்கு, கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள், கர்ப்ப கால கவனிப்புகள், பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் மற்றும் குழந்தை வளர்ச்சி பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

மேலும், அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள் பணத்துக்காக இது போன்ற செயல்களை ஈடுபட்டு வருகின்றனர். அறுவை சிகிச்சையை தடுத்து சுகப்பிரசவம் மூலம் குழந்தை பெற அரசு மருத்துவமனைகளில் அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அரசு மருத்துவமனைகளை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், அரசு மருத்துவமனைக்கு இணையாக தனியார் மருத்துவமனைகள் எங்கும் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் கட்டடங்கள் மட்டும் தான் நன்றாக உள்ளது. உயரிய சிகிச்சைகள் எதுவும் இல்லை, ஆனால் அரசு மருத்துவமனைகளில் உயரிய சிகிச்சைக்கான சிறந்த கட்டமைப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை உருவாக்கியுள்ளது.

எத்தனை சக்திகள் வந்தாலும், தமிழ் சக்தியாக பராசக்தியின் புதல்வனாக முதலமைச்சர் ஸ்டாலின் விளங்குகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் எதை நான் பராசக்தி என்று கூறுகிறேன் என்றால், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனம் எழுதி தமிழ் திரைப்பட உலகில் எப்படி ஒரு புரட்சியை உருவாக்கினாரோ அந்தப் பராசக்தியின் புதல்வனாக விளங்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சமம் என்ற தனது நோக்கத்துடன் செயல்படுகிறார்” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில்நகர் மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.