புதுக்கோட்டை: திருமயம் அருகே ராயபுரத்தில் உள்ள நொண்டி அய்யனார் திடலில் பொங்கலை முன்னிட்டு வி.என்.கே மஞ்சுவிரட்டு பேரவை நடத்திய மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். மேலும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
800-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளி அண்டா, கட்டில், நாற்காலி ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டு போட்டியில் 14 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள திருமயம், அரிமளம், அறந்தாங்கி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மஞ்சுவிரட்டில் சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகிலுள்ள புதுவயலைச் சேர்ந்த கணேசன் என்ற பார்வையாளர் மாடு முட்டியதில் அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: 'தேநீருக்கு இரட்டைக்குவளை கூடாதெனில், குடிநீருக்கும் இரட்டைத் தொட்டி கூடாது' - திருமாவளவன் ஆவேசம்