புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால் ரோடு பகுதியில் சிவக்குமார் என்பவர் பகவான் என்ற பெயரில் டீ கடையை நடத்தி வருகிறார். இவர், கடந்த கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பொதுமக்களின் டீக்கடை கடன்களை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தன்னால் முடிந்த உதவியை செய்ய எண்ணினார். தனது டீக்கடையில் வரும் வாடிக்கையாளர்களிடம் டீக்கான தொகையை தன்னிடம் வழங்க வேண்டாம், அந்தத் தொகையை கடை வாசலில் வைக்கப்பட்டிருக்கும் மொய் பாத்திரத்தில் நிதியாக அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
டீக்கடைக்காரரின் இந்த செயலை பார்த்த பொதுமக்கள் டீ குடித்து விட்டு அவர்களால் முடிந்த பணத்தை வழங்கினர்.
பின்னர் சிவக்குமார் தனக்கு கிடைத்த ரூ.15,000 பணத்தை டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் ஒப்படைத்தார். தற்போது இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: 'பழைய நோட்டை பார்க்கவும்' - மொய் செய்ய வலியுறுத்தும் திருமண அழைப்பிதழ்!