ETV Bharat / state

ஆசிரியர்களை கடிந்துகொண்ட ஆட்சியர் கவிதா.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?

தன்னை வரவேற்க காலணி இல்லாமல் நின்ற மாணவர்களை கண்ட உடன் ஆசிரியர்களை கண்டித்து உடனடியாக மாணவர்களை காலணியை போட சொன்ன புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் செயல் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஆசிரியர்களை கடிந்துகொண்ட ஆட்சியர் கவிதா
ஆசிரியர்களை கடிந்துகொண்ட ஆட்சியர் கவிதா
author img

By

Published : Feb 2, 2023, 10:08 AM IST

ஆசிரியர்களை கடிந்துகொண்ட ஆட்சியர் கவிதா

புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் தமிழ்நாடு முழுவதும் புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ரூ.28 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு கலந்துகொண்டார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை வரவேற்க ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் காலணி அணியாமல் இருப்பதைப் போல், பள்ளியின் நுழைவாயிலில் காலணி அணியாமல் வரிசையாக நின்று வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காரில் வந்து இறங்கி பள்ளி வளாகத்திற்கு நுழையும் போது மாணவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

மாணவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், அவர்கள் காலணி அணியாமல் நின்று வரவேற்பதை கவனித்து, உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்களிடம் ஏன் மாணவர்கள் காலணி அணியாமல் நிற்கிறார்கள் என கேள்வி எழுப்பினார். இதற்கு ஆசிரியர்கள் பதில் சொல்ல முடியாமல் விழித்தனர்.

உடனடியாக மாணவர்களைக் காலணியை அணியச் செய்யச் சொல்லுங்கள் என உத்தரவிட்டார். இதையடுத்து அந்த மாணவர்களும் காலணியை அணிந்து கொண்டு நின்றனர். மாவட்ட ஆட்சியரின் இந்த கனிவு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதையும் படிங்க: புதிய கட்டிடத்திற்கு பள்ளி மாணவர்களை அழைத்து அடிக்கல் நாட்டிய ஆட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.