ETV Bharat / state

பொன்னமராவதி கலவரம்: சிபிஎம் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு!

author img

By

Published : Jun 4, 2019, 7:49 AM IST

புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் சிலரை காவல் துறையினர் விடுதலை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

சிபிஎம் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாகப் பேசிய ஆடியோ, வீடியோ வெளியாகி பொன்னமராவதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் எந்த தவறும் செய்யாத அப்பாவி மக்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை உடனடியாக காவல் துறையினர் ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், "பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும். உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. அவர்கள் மீதுள்ள வழக்கை காவல் துறையினர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்க முடியாது" என தெரிவித்தனர்.

Intro:குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவாக பேசிய சர்ச்சைக்குரிய ஆடியோ மற்றும் வீடியோ வெளியிட்டதில் ஏற்பட்ட பொன்னமராவதி கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தவறு செய்யாத அப்பாவி மக்களும் இருக்கின்றனர் அவர்கள் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர்.

Body:இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது ,

பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு காரணமானவர்களை மட்டுமே கைது செய்ய வேண்டும் உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது அதனால் அவர்கள் மீதுள்ள வழக்கை போலீசார் ரத்து செய்ய வேண்டும் தவறு செய்யாமல் தண்டனையை அனுபவிக்க முடியாது. இதனால் அவர்களது குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே காவல்துறை உடனடியாக அந்த வழக்கை ரத்து செய்து அப்பாவி மக்களை விடுதலை அளிக்க வேண்டும் தவறு செய்தவர்களை மட்டுமே தண்டிக்க வேண்டும்.
அதற்காக இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுத்துள்ளோம் மேலும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.