ETV Bharat / state

புதுக்கோட்டையில் மன உளைச்சலால் தந்தை - மகள் தற்கொலை! - ஆலங்குடி தந்தை மகள் தற்கொலை

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே தந்தை தனது மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicidesuicide
suicide
author img

By

Published : Sep 4, 2020, 3:08 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பணங்குளம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் செல்லையா (70). இவரது மனைவி இறந்துவிட்டதால் தனது மாற்றுத்திறனாளி மகள் சாந்திவுடன் (46) தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தங்களை பராமரிக்க யாரும் இல்லாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த செல்லையா தனது மகளுக்கு குருணை மருந்தை, சோற்றில் கலந்து கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டுள்ளார்.

சாந்தி வயிற்று வலியால் சத்தம் போடவும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் விசாரித்தபோது, குருணை மருந்தை மகளுக்கு கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டதாக செல்லையா கூறியுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்ள மருத்துவர்கள் பார்க்க முடியாத நிலையில் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

ஆனால் அவர்கள் கொண்டு செல்லும் வழியில் இருவரும் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

46 வயதை அடைந்த மாற்றுத்திறனாளி மகள் சாந்தியை திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் இருந்ததால், அவர் தந்தை உணவில் விஷம் கலந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்த கீரமங்கலம் காவல்துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு இறந்தவர்களின் தகவலை பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வணங்கும் தெய்வத்தை மகிழ்விக்க மனைவியை நரபலி கொடுத்த கணவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.