புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேவுள்ள காலாடிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ். இவரது மனைவி அகிலாண்டம் (30). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், மூத்த மகன் கேசவன் என்பவர் மாற்றுத்திறனாளி.
இந்நிலையில், குடிப்பழக்கம் உள்ள செல்வராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அகிலாண்டம், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு தனது குழந்தைகளுக்கும் கொடுக்க முடிவுசெய்தார். விஷத்தை 3 பேருக்கும் கொடுக்க முயன்றபோது, 2 குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே தப்பியோடிவிட்டனர்.
இதனால், மாற்றுத்திறனாளியான கேசவனுக்கு மட்டும் கொடுத்துள்ளார். இதில், மயங்கிய அவர்கள் இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கேசவன் உயிரிழந்தார். அகிலாண்டத்திற்கு இலுப்பூர் அரசு மருத்துவனையில் முதல் உதவி சிகிச்சையளிக்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்த அன்னவாசல் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.