ETV Bharat / state

அமைச்சர் விஜயபாஸ்கர் இருக்கும் வரை திமுக வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது: கே.என்.நேரு நையாண்டி!

புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கரும், தம்பிதுரையும் இருக்கும் வரை திராவிட முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

கே.என்.நேரு
author img

By

Published : Mar 29, 2019, 9:49 AM IST

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கந்தவர்கோட்டை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் புதுக்கோட்டை பழனியப்பா தியேட்டர் திடலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

இதனிடையே செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு கூறுகையில், "திராவிட முன்னேற்றக் கழகமானது கட்டுக்கோப்பான கட்சி. தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய கட்சி. அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை இருக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது" என நகைச்சுவையுடன் பேசினார்.

இதையடுத்து திருநாவுக்கரசர் பேசுகையில், "வாழ்க்கையில் நான் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே செய்து வருகிறேன். புதுக்கோட்டையை பொருத்தவரை அனைத்து கிராமங்களுக்கும், பஞ்சாயத்து பகுதிகளுக்கும் நான் சென்று வந்தவன். 24 வயதில் அரசியலில் நுழைந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளேன். எனக்கு நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட இந்த அரிய வாய்ப்பை வழங்கிய காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலில் பொதுமக்கள் என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்" எனக் கூறினார்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிகளின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  செயல்வீரர்கள் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை பழனியப்பா தியேட்டர் திடலில் நடைபெற்ற இந்த செயல்வீரர் கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டவர்கள் கலந்து கொண்டனர் முன்னாள் அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்
கே.என். நேரு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் கேகே செல்லபாண்டியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் புதுக்கோட்டை எம்எல்ஏ பெரியண்ணன் அரசு திருமயம் எம் எல் ஏ மற்றும் புதுக்கோட்டையில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்
S. ரகுபதி மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த சந்திரசேகரன், முருகேசன் ,கவிவர்மன், மாதவன் ,அறிவொளி, விடுதலைக்கானல்,
அஸ்ரப் அலி, அப்துல்கனி ,சீனிவாசன் ,
துரை முகமது ,ஆகியோரும் கட்சியிலிருந்து கலந்து கொண்டனர்.

முன்னதாக பழனியப்பா தியேட்டர்களில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிமனையை  திருச்சி தெற்கு மாவட்ட கழக பொருளாளர் K.N நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கே என் நேரு அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கட்சியானது கட்டுக்கோப்பான கட்சி என்றும் தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய கட்சி என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி மணப்பாறை மற்றும் விராலிமலையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பொதுமக்கள் தன்னார்வத்தோடு கலந்து கொண்டது தங்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில்  இருந்ததாகவும் இந்த மக்கள் கூட்டம் அதிமுக ஆட்சியின் எதிர்ப்பின் காரணமாகவே வந்த கூட்டம் என்றும், அதிமுகவை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தம்பிதுரை இருக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது எனவும் நகைச்சுவையுடன் கூறினார்.

விழாவில் பேசிய திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் திருநாவுக்கரசு காங்கிரஸ் கட்சியின் தலைவர் 
ராகுல் காந்தி அவர்கள் ஸ்டாலினிடம் திருச்சி தொகுதியை கேட்டு பெற்றதாகவும் அதை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பேசினார்.

தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசர் வாழ்க்கையில் நான் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது என்றும் மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே இருப்பதாகவும் இனி வரும் காலங்களில் மக்களுக்கு சேவை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வதாகவும் புதுக்கோட்டையை பொருத்தவரை அனைத்து கிராமங்களும், பஞ்சாயத்து பகுதிகளுக்கும், நான் சென்று வந்தவர் என்றும் 24 வயதில் அரசியலில் நுழைந்து பல முக்கியப் பொறுப்புகளை வைகித்ததாகவும் , எனக்கு தற்பொழுது பாராளுமன்ற தேர்தலில் நிற்க்க இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அக்கட்சியை சேர்ந்த அனைத்து மட்ட பொறுப்பாளர்களுக்கும் என்னுடைய நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த தேர்தலில் பொதுமக்கள் என்னை  பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.