ETV Bharat / state

புதுக்கோட்டைக்கு ரூ.2,195 கோடியில் தனி கூட்டு குடிநீர் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்! - Joint drinking water scheme

நிதிச்சுமை இருப்பதால் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும் நிதி நிலை சரியான பின்னர் அவர்களை அரசு பணியாளர்களாக நியமிக்க வாய்ப்புள்ளது என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் ரூ.2,195 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்
அமைச்சர் கே.என்.நேரு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 1:35 PM IST

புதுக்கோட்டையில் ரூ.2,195 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனியாக 2 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என குடிநீர் அபிவிருத்தி திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகராட்சியில் 29 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு 10 எம்.எல்.டி நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 56 பேர் பயன்பெறும் வகையில், 16 எம்.எல்.டி குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவிரி ஆற்றில் இரண்டு கூடுதல் நீர் உறிஞ்சி கிணறு ஏற்படுத்தவும், அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகளில் சிமெண்ட் காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக டி.ஐ.எம்.எஸ் குழாய்களாக மாற்றவும், புதுக்கோட்டை நகராட்சி, ஆரம்பப் பகுதியில் தரைமட்ட நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கவும், 75.06 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு, திருவப்பூரில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசியதாவது, "காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகி குடிநீர் குழாய்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதால் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், குழாய்களை புதிதாக அமைக்க 75 கோடி ரூபாய் மதிப்பில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. தற்போது 10 எம்.எல்.டி தண்ணீர் புதுக்கோட்டை நகராட்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமை அடையும் போது 16 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்படும். மேலும், 48 எம்.எல்.டி தண்ணீர் மாவட்ட முழுவதும் வழங்குவதற்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் திட்டம் ஆய்வில் உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனியாக 2 ஆயிரத்து 195 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை நகராட்சிக்கு, தனியாக 600 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டமும் வழங்கப்பட உள்ளது. மத்திய அரசு நிதி, ஜல்ஜீவன் திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து இந்த பணிகள் நடைபெற உள்ளன.

தமிழகத்தில், பாதாள சாக்கடை திட்ட அடைப்புகளை சரி செய்வதற்கு சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்கள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் மனிதர்களை பயன்படுத்தாமல் இயந்திரங்கள் மூலமாக கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அதற்கென்று தனி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தெரியாமல் பொதுமக்கள் கழிவுகளை, மனிதர்களைக் கொண்டு சுத்தம் செய்வதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. நிதிச்சுமை இருப்பதால் தான் தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. நிதி நிலை சரியான பின்னர் அவர்களை அரசு பணியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 490 பேரூராட்சிகள், 190 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள் உள்ளன. அவுட்சோர்சிங் மூலமாக பணியாளர்கள் நியமனம் செய்யும் போது குறிப்பிட்ட காலத்திற்குள் மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும் என்று தான் அரசு கூறியுள்ளது. ஒரு சிலரால் தவறு நடக்கிறது. எனவே அதனை கண்காணித்து அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேகும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகராட்சிகள், முதலமைச்சர் ஒப்புதல் பெற்ற பின்னர் மாநகராட்சியாக மாற்றப்படும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, தண்ணீர் பஞ்சம் ஏற்படாது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சேலம் அரசு மருத்துவமனை நோயாளிகள் வார்டில் இறந்தவர் உடல்.. துர்நாற்றம் வீசுவதால் தொற்று பரவும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.