புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது
சுகாதாரத்துறையின் சார்பில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும்
விழிப்புணர்வு முகாமினை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.சி.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று துவக்கி
வைத்தார்.இம்முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர்
பி.கே.வைரமுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமினை துவக்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை
அமைச்சர் அவர்கள் பேசியதாவது.
தேசிய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்துள்ளது.
தமிழகத்தில் மேலும் குழந்தைகள் இறப்பு விகதத்தை குறைக்கும் வகையில்
தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த
வகையில் தமிழகத்தில் வயிற்றுப்போக்கால் குழந்தைகள் இறப்பு இல்லாத
நிலையை உருவாக்கும் வகையில் தமிழக அரசு இருவார கால தீவிர
வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாமை மேற்கொண்டு வருகிறது.
இம்முகாம் 28.05.2019 இன்று முதல் 08.06.2019 வரை இருவார
காலத்திற்கு நடைபெற உள்ளது. இம்முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு
ஓ.ஆர்.எஸ் உப்பு கரைசல் வழங்குதல்இ குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க
வேண்டியதன் அவசியத்தை வழியுறுத்துதல்இ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஊட்ட சத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து ஊட்ட
சத்து வழங்குதல் மற்றும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை
வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.
இதுபோன்ற முகாம்கள் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு
மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், அரசு
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின்
இறப்பு விகிதம் மேலும் குறைந்து இறப்பு இல்லா நிலை உருவாக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 5
வயதிற்குட்பட்ட 1.38 லட்சம் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற
உள்ளனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த
ஆண்டும் 150 மருத்துவ படிப்பிற்கான அனுமதியினை இந்திய மருத்துவ
கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் பி.ஜி படிப்பு, பாரா மெடிக்கலில் டெக்னிஷன்
பிரிவு போன்ற படிப்பிற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதுடன், ரூ.100 கோடி
மதிப்பீட்டில் சிறுநீரக ஒப்புயர்வு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். இவ்வாறு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள்
பேசினார்.