புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரம் அமைந்துள்ளது. இங்குள்ள கண்மாயில் சிலர் சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் நாகுடி காவல் உதவி ஆய்வாளர் நவீன்குமார், காவலர் ராம்குமார் ஆகியோர் சென்று பார்க்கும்போது சிதம்பரம் என்பவர் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, சிதம்பரத்தைக் கையும்களவுமாகப் பிடித்த காவல் துறையினர் அவரைக் கைதுசெய்தனர். மேலும், அவரிடமிருந்து கள்ளச்சாரயத்தைக் கைப்பற்றிய காவல் துறையினர், இதுதொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.