ETV Bharat / state

அரசின் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர் - புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சி

புதுக்கோட்டை: அரசின் திட்டங்களை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அரசின் திட்டங்கள் மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

author img

By

Published : Feb 4, 2021, 8:26 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் இன்று(பிப்.4) நடைபெற்றது.

இந்நிகழ்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசியதாவது,தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் நலனில் தனி கவனம் செலுத்தி, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் நடத்திட அலுவலர்களிடம் தான் அறிவுறுத்தியதன் பேரில் இன்றைய தினம் இம்முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித் தொகை, காதொலிக் கருவி, செயற்கை கால் ஊன்றுகோல், மூன்று சக்கர வாகனங்கள், அடையாள அட்டை என பல்வேறு தேவைகளுக்காக தொடர்புடைய அலுவலகத்திற்கு சென்று அணுகி வந்த நிலையை மாற்றி எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் அத்தனை திட்டங்களையும் கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இன்றைய தினம் இங்கு நடைபெறுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் 235 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளித்துள்ளனர். இதில் காதொலிக் கருவி, அடையாள அட்டை, ஊன்றுகோல், மருத்துவச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாளையதினம் பிப்ரவரி 5ஆம் தேதி இலுப்பூர் சமுதாயக் கூடத்திலும் நாளைய மறுநாள் பிப்ரவரி 6ஆம் தேதி விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

விராலிமலை சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான நலத்திட்ட உதவிகள் விடுபடாமல் கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகவலை தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்தியக் குழு நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.