ETV Bharat / state

கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருமயம் கண்மாய் குளிக்கச் சென்ற சிறுமி பலி

புதுக்கோட்டை: கண்மாயில் குளிக்கச் சென்ற 10 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமயம்
திருமயம்
author img

By

Published : Jan 10, 2021, 11:00 PM IST

புது‌க்கோ‌ட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரம் வாசுகி புரத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் திவ்யா (10) இங்குள்ள ஆரம்பப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கரோனா காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த திவ்யா, மாலை அவரது பாட்டியுடன் கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.

பாட்டி உடைகளை துவைத்துக்கொண்டிருந்தபோது திவ்யா கீழே இறங்கி குளிக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரிமளம் ஆய்வாளர் பாரதி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வீராணம் ஏரியிலிருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.