ETV Bharat / state

கடல்பசுவை கடத்திய 4 பேர் கைது

புதுக்கோட்டை: மீமிசல் அருகே கடல் பசுவை கடத்திய 4 பேரை கடலோர பாதுகாப்பு அலுவலர்கள் கைது செய்தனர்.

கடத்தப்பட்ட கடல்பசுவை மீட்ட அலுவலர்கள் மீண்டும் கடலில்விட்டனர்
author img

By

Published : Sep 26, 2019, 4:42 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் பசுவை சிலர் பிடித்து வருவதாக கடலோர பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு அலுவலர்கள் கடற்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடலில் நின்றுகொண்டிருந்த புதுக்குடி சுந்தராசு மகன் மாரிமுத்து (45), படகை சோதனை செய்தபோது சுமார் 4 அடி நீளத்தில் 100 கிலோ எடை கொண்ட கடல் பசு உயிருடன் இருந்தது.

கடத்தப்பட்ட கடல்பசுவை மீட்ட அலுவலர்கள் மீண்டும் கடலில்விட்டனர்

பின்னர் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை பாதுகாப்பு அலுவலர்கள் கைது செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட கடல் பசு மீண்டும் கடலிலேயேவிடப்பட்டது.
இதையும் படிங்க: கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட மாணவர்கள்!

Intro:புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கடல் பசுவை கடத்திய 4 பேர் கைது..Body:புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு புதுக்குடி கிராமத்தில் வெட்டி விற்பனை செய்வதற்காக அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை பிடித்து பைபர் படகில் கரைக்கு கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் புதுக்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் அன்னலட்சுமி ,திருப்புனவாசல் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுபதி யின் குழு ரோந்து சென்று கண்காணித்த போது புதுக்குடி சுடுகாடு கடற்கரை அருகே கடலில் நின்றுகொண்டிருந்த படகில் இருந்த படகின் உரிமையாளர் மாரிமுத்து ,ராமு ,நந்தகுமார் ,ஜெகதீஷ் கண்ணன் , ஆகியோரை பிடித்து சோதனை செய்தபோது சுமார் 4 அடி நீளம் மற்றும் 100 கிலோ எடை கொண்ட கடல் பசு உயிருடன் படகில் இருந்தது. மேற்படி அரசால் தடைசெய்யப்பட்ட கடல் பசுவை வெட்டி விற்பனை செய்வதற்காக வேட்டையாடி வைத்திருந்த குற்றத்திற்காக அவர்களை கைது செய்தனத்.உயிருடன் இருந்த கடல்பசு, மீனவர்கள் மற்றும் படகை கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.மேற்படி உயிருடன் இருந்த கடல்பசுவை கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் வனத்துறையினர் முன்னிலையில் மீண்டும் கடலிலேயே விடப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.