ETV Bharat / state

புதுக்கோட்டையில் இருதரப்பினர் மோதல்.. போலீசார் வழக்குப்பதிவு! - Conflict

புதுக்கோட்டை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற குடியிருப்போர் நலச் சங்கம் கூட்டத்தில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட அடிதடி மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் குடியிருப்போர் நலச் சங்க கூட்டத்தில் இருதரப்பு அடிதடி மோதல்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 10:45 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புறநகர் பகுதியான போஸ் நகரில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 300-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் சமீபத்தில் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, அதனை கட்டி வீடு இல்லாத மிகவும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்கள் குடியேறினர்.

இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் குடியிருப்பில் குடியேறிய ஒரு சில நாட்களில் அதிகாரிகள் மேலும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் கொடுத்ததால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் போராட்டம், சாலை மறியல், மாவட்ட ஆட்சியரிடம் மனு என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனிடையே இதுபற்றி ஆலோசிப்பதற்காக குடியிருப்பு வாசிகள் நல சங்கம் சார்பில் நேற்று இரவு (அக்.15) கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போஸ் நகர் பகுதியில் அதிமுக நகர்மன்ற உறுப்பினரான சுமதி 8 மாத கர்ப்பிணியாக உள்ளதால், கூட்டத்தில் சுமதி கணவர் பன்னீர்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள் சுப.சரவணன், பால்ராஜ், லதா ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது குடியிருப்பில் இருந்துவரும் சிவராஜன் என்பவருக்கும், கவுன்சிலர் சுமதியின் கணவர் பன்னீர்செல்வத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிவராஜன் தனது செல்போனில் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனைக்கண்டு ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம், தன் ஆதரவாளர்களைக் கொண்டு சிவராஜனையும், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களையும் அடித்து, தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் முதலில் காயம் அடைந்த சிவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதனால் இச்சம்பவம் கேள்விப்பட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் போஸ் நகர் அடுக்குமாடி குடியிருப்போர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் திரண்டு வந்து புதுக்கோட்டை தஞ்சை சாலையில் பிருந்தாவனம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் சாலை மறியல் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே தாக்குதலில் காயமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சிவராஜன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க உறுப்பினர்கள் நகர்மன்ற உறுப்பினர் சுமதியின் கணவர் பன்னீர்செல்வத்தையும், அவருடைய ஆதரவாளர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதன் அடிப்படையில் தற்போது தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோதலில் காயமடைந்த நகர் மன்ற உறுப்பினரின் கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை (அக்.16) போஸ் நகர் மன்ற உறுப்பினர் சுமதி, சுமதியின் கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை தரக்குறைவாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சிவராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கணேஷ் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சிவராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து நகர் மன்ற உறுப்பினர் சுமதி பன்னீர்செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சிவராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: "இது என்ன சந்தையா?" உங்க சொல்போனை கொடுங்க.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.