ETV Bharat / state

புதுக்கோட்டை தீண்டாமை: இறையூர் பொதுமக்களுடன் கோட்டாட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தை

புதுக்கோட்டை அருகே இறையூரில் இரட்டைக்குவளை முறை, கோயிலில் அனுமதிக்காதது மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தப் பின், இவற்றிற்கு தீர்வு காண்பதற்கான சமாதானக் கூட்டம் கோட்டாட்சியர் முன்னிலையில் இன்று நடந்தது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 28, 2022, 10:43 PM IST

புதுக்கோட்டை தீண்டாமை: இறையூர் பொதுமக்களுடன் கோட்டாட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தை

புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம், அந்த கிராமத்தில் உள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், அதேபோல் அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை பயன்படுத்தபட்ட சம்பவம் இவை குறித்து விசாரித்து தீர்வு காண்பதற்காக அந்த கிராமத்தில் வசிக்கும் பட்டியலின சமூக மக்கள் உள்ளிட்ட மூன்று சமூக மக்கள் பிரதிநிதிகளுடனான சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் இன்று இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இறையூர் கிராமத்தில் வசிக்கும் மூன்று சமூகங்களை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளாக 26 பேர் பங்கேற்றனர்.

முன்னதாக, வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த சம்பவம் எதிரொலியாக, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மக்களிடையே தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்ததும், கோயில்களில் சாமி தரிசனம் செய்யவிடாமல் பல தலைமுறைகளாக தடுத்து வந்ததும், டீக்கடைகளில் இரட்டைக்குவளை முறை இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், அக்கிராமத்தில் முகாமிட்டு சம்பந்தப்பட்ட மக்களை ஊரிலுள்ள அய்யனார் கோயிலுக்குள் நுழைய வைத்து சாமி தரிசனம் செய்ய வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கோயிலுக்குள் பட்டியல் இன மக்கள் சாமி தரிசனம் செய்தபோது திடீரென்று பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாமியாடிய படி, ஆதிதிராவிட மக்களை தகாத வார்த்தைகளால் திட்டியதைத் தொடர்ந்து, அவரும் இரட்டைக்குவளை முறையைக் கடைப்பிடித்ததற்காக டீக்கடையின் உரிமையாளர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் சிலரை வலைவீசித் தேடி வருகின்றனர். இதனிடையே இன்று இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு கோரிய மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர் இந்த சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கள் கிராமத்திற்கு வந்து உடனடியாக தங்களது கோரிக்கைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை மேற்கொண்டது குறித்து பட்டியலின மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.