ETV Bharat / state

ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்கு பிரசவம் - மருத்துவ உதவியாளர், பைலட்டுக்குப் பாராட்டு தெரிவித்த மக்கள்!

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் 108 ஆம்புலன்ஸில் இளம் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

Childbirth for a young woman in an ambulance

author img

By

Published : Aug 12, 2020, 6:20 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி சுதா ராணி (26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு காலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுதா ராணி பரம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். பின்னர் இலுப்பூரில் இருந்து 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சுதா ராணியை அனுப்பி வைத்தனர்.

அப்போது அன்னவாசல் - புதுக்கோட்டை சாலையில் கட்டியாவயல் என்னும் இடத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது, சுதா ராணி பிரசவ வலியால் துடித்தார். இதனையடுத்து சுதா ராணிக்கு ஆம்புலன்ஸிலேயே மருத்துவ உதவியாளர் பூபதி ராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாய் சுதா ராணி, குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து ஆம்புலன்ஸ் பைலட் தேவபாஸ்கரன் கூறியபோது, 'பிரசவ சிகிச்சை மிகவும் சிக்கலானது. அதிக வலியால் அவதிப்படும் கர்ப்பிணிகளுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம் பார்க்க நேரிடுகிறது. இலுப்பூர் ஆம்புலன்ஸில் மட்டும் ஆண்டுக்கு பல பிரசவ சிகிச்சை அளித்து தாய், சேயை காப்பாற்றி உள்ளோம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, இதே போன்று ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது' என்றார்.

இதையடுத்து மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகிய இருவருக்கும் குழந்தையின் பெற்றோர், பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.