திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து வந்துள்ளது. அதனைப் பின்தொடர்ந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனமும், லாரியும் வந்துள்ளன. சத்தியமங்கலம் வரை பின்னே வந்த லாரி, பேருந்தையும், சரக்கு வாகனத்தையும் முந்தி செல்ல முயன்றபோது, புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து வந்துள்ளது.
இதனையடுத்து விபத்து ஏற்படாமல் தடுக்க, லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார். எதிரே வந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறக்கியுள்ளார்.
ஆனால் லாரியை பின்தொடர்ந்து வந்த தனியார் பேருந்து, சரக்கு வாகனம் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளனூர் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து, விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது!