திருச்சியிலிருந்து பொன்னமராவதி நோக்கி தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. கேசராபட்டி அருகே சென்ற போது, எதிரே இருமபுக்கம்பிகளை ஏற்றி வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 14 பேர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து அவர்கள், வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர், போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற தனியார் பேருந்து மற்றும் லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுதொடர்பாக பொன்னமராவதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: டிஐஜி சர்ப்ரைஸ் விசிட் - மதுபோதையில் பதிலளித்த உதவி காவல் ஆய்வாளர்!