ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்..! ஓராண்டாகியும் நியாயம் கிடைக்கவில்லை என மக்கள் வேதனை..! - 2023 ஆண்டுக்கண்ணோட்டம்

Vengaivayal issue: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஓராண்டாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Vengaivayal issue case full background
வேங்கைவயல் விவகாரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2023, 4:18 PM IST

Updated : Dec 26, 2023, 5:04 PM IST

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதி, முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் வேங்கைவயலில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தக்கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து குடிநீரை அப்பகுதி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பருகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குடிநீர் பருகியவர்கள் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களைப் பரிசோதித்த மருத்துவர், அவர்கள் பருகிய குடிநீரால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இதனையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியைச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவேந்திரன்
புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவேந்திரன்

இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வெள்ளனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை முன்னாள் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இருவரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்த போது முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கோயிலில் பட்டியலின மக்கள் செல்ல மறுக்கப்படுவதாகவும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை செயல்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

மேலும், கோயிலில் மாவட்ட ஆட்சியர் முன்பு சாமியாடிய பெண் பட்டியலின மக்களை கோவிலில் நுழைய மறுப்பு தெரிவித்ததையடுத்து அவர் மீதும், டீக்கடை உரிமையாளர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அங்குள்ள கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அழைத்துச் சென்று கோவில் வழிபாடு செய்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.

மேலும், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மேலும், பொது மக்களிடையே சாதிய பாகுபாட்டைக் களையும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் முன்னிலையில் மூன்று சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பொங்கல் பொருட்கள் அரிசி, வெல்லம், பருப்பு ஆகியவற்றைப் பெற்று ஒரே பாத்திரத்தில் சமைத்துப் பொங்கல் வைத்து, அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்தப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் டிஎஸ்பி ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையில் உண்மைத் தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் 35 சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில் குற்றவாளிகளைக் கண்டறிய சிபிசிஐடி காவல்துறையினர் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை நாடிய நிலையில் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் முதற்கட்டமாக 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் எடுக்க அனுமதி கொடுத்தது, இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி 11 பேரைப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருமாறு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர்.

இதில், அன்று 3 பேர் ஆஜரான நிலையில் வேங்கைவயலை சேர்ந்த பட்டியலின மக்கள் 8 பேர் ஆஜராகவில்லை. பின்னர் அந்த 8 பேரும் ரத்த மாதிரிகள் கொடுக்காமலிருந்த நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் மேலும் 10 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த 10 பேருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரியும், அதேபோல் இருவருக்குக் குரல் மாதிரி பரிசோதனையும் செய்து சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க மறுப்பு தெரிவித்த வேங்கை வயலைச் சேர்ந்த 8 பேரில் ஒருவரான முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடி பாதிக்கப்பட்ட மக்களையே காவல்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்த முயல்வதாக வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கின் அடிப்படையில் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த 8 பேரும் வழக்கு விசாரணை நடைபெறும் புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தையே நாடி தீர்வு காணலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 8 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராயினர். ஆஜரானவர்களிடம் சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நகலைச் சம்பந்தப்பட்ட 8 நபர்களிடமும் நீதிபதி ஜெயந்தி வழங்கி அதனைப் படித்துப் பார்த்து, அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது விளக்கத்தைத் தெரிவிக்கலாம் என்று கூறி அந்த 8 பேரையும் அனுப்பி வைத்தார்.

அதன்பின், சம்பந்தப்பட்ட 8 பேரும் மீண்டும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும், இவர்களுடன் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியும் ஆஜரானார். டிஎஸ்பி பால்பாண்டியன் இந்த வழக்கைப் பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளதால் அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட 8 பேருக்கு மட்டும் டிஎன்ஏ பரிசோதனை எடுக்க அனுமதி கேட்கவில்லை என்றும் அந்தப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட 8 பேரிடம் தனித்தனியாக எதற்காக டிஎன்ஏ பரிசோதனை எடுக்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்று நீதிபதி ஜெயந்தி கேள்வி எழுப்பிய நிலையில், அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களையே விசாரணைக்கு உட்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதாகவும், அதனால் டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவிப்பதாக 8 பேரும் தனித்தனியாக ஒரே பதிலைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நீதிபதி இந்த வழக்கு குறித்து எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் டிஎன்ஏ மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேரும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, கடந்த ஜூலை 5ஆம் தேதி வேங்கை வயல் கிராமத்தைச் சேர்ந்த 8 பேருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் நான்கு சிறார்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.

இதனால் இறையூர், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்கள் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள ஆட்சேபனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி ஒரு சிறுவன் உட்பட 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அவர்களிடம் வாக்குமூலம் பெற்றதன் அடிப்படையில் ரத்த மாதிரி சேகரிக்க இறையூர் பகுதியைச் சேர்ந்த 4 பேர், வேங்கை வயல் பகுதியைச் சேர்ந்த இருவர் என 6 பேருக்குப் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி சேகரிக்க நீதிபதி ஜெயந்தி சிபிசிஐடி காவல்துறைக்கு அனுமதி வழங்கினார்.

இந்த வழக்கில் இதுவரை நான்கு சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி காவல்துறையினர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 28ஆம் தேதி, டிசம்பர் 5, 8, 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 21ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை வரும் ஜனவரி 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுவரை 31 பேருக்குப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. வேங்கைவயல் குற்றவாளிகளை வெளி உலகுக்குக் காட்டுங்கள் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்.

டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு உண்மையான குற்றவாளியைக் கண்டறிய முடியாமல் திணறும் விசாரணைக் குழுவினர் அடுத்தகட்டமாக உண்மை கண்டறியும் சோதனைக்குப் பலரை உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வழக்கானது பல கட்டங்களையும், பல்வேறு அமைப்புகளின் போராட்டங்களையும் தாண்டி தற்போது வரை சிபிசிஐடி காவல்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இருந்தும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்காமல் இருப்பது அப்பகுதி மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும், இதுவரை ஒருவரைக் கூட கைது செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் சிபிசிஐடி காவல்துறையினர். பல்வேறு வழக்குகளைத் திறமையாகக் கையாளும் தமிழக காவல்துறையினர், இந்த வேங்கைவயல் சம்பவத்திலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், அரசியல் குறுக்கீடு காரணமாக இந்த வழக்கு மெத்தனமாக உள்ளதா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருப்பது அரசுக்கு தலைக்குனிவையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி டிஎஸ்பி பால்பாண்டியன் தெரிவிக்கையில், “இந்த வழக்கைப் பொறுத்தவரை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய நிலை உள்ளது. டிஎன்ஏ சோதனை, குரல் மாதிரி பரிசோதனை, உண்மை கண்டறியும் சோதனை என பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கில் எந்தவித தொய்வும் இல்லை என்றும், விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து, புதுக்கோட்டையைச் சேர்ந்த கோவேந்திரன் தெரிவிக்கையில், “வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றது. இது குறித்து பல்வேறு கட்ட சோதனைகள், விசாரணை நடைபெற்று வந்தாலும் இதுவரை குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறைக்கு இந்த வழக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எனவே, இந்த வழக்கில் காவல்துறையும், தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: மறக்குமா நெஞ்சம்..! ஆழிப்பேரலையால் அதிர்ந்த தமிழகம்..! 19வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று!

Last Updated : Dec 26, 2023, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.