ETV Bharat / state

பெரம்பலூரில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்!

பெரம்பலூர்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் கொன்றைப் பூக்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளன.

பெரம்பலூரில் பூத்து குலுங்கும் மஞ்சள் கொன்றை பூக்கள்
author img

By

Published : May 12, 2019, 7:37 AM IST

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கொன்றை மலர்கள் சீசன் தொடங்கி பூத்துக் குலுங்குவது வழக்கம். தற்போது தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெரம்பலூர் மாவட்டத்திலும் அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் தற்பொழுது பூத்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மரங்களுக்கு இடையில், மஞ்சள் நிறத்தில் பூத்து குலுங்கும் இந்த கொன்றை மலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வருகை தரும் பொதுமக்களும் பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர். இதே போல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இந்த மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கி ரம்மியமாக காட்சி அளிக்கின்றன.

Intro:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் கொன்றைப் பூக்கள் பொதுமக்கள் பார்த்து ரசிப்பு

Body:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் தற்பொழுது பூத்துக் குலுங்கி காண்போருக்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் தற்பொழுது பூத்து காட்சியளிக்கிறது கொத்துக் கொத்தாய் இருக்கும் இந்த பூக்கள் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது மேலும் கோடை காலமான இந்த காலத்தில் மற்ற மரங்களில் இருந்து வேறுபட்டு காண்பவருக்கு பளிச்சென்று மஞ்சள் நிறமாகி கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கி காட்சியளிக்கிறது இந்த மஞ்சள் கொன்றைப் பூக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தரும் பொதுமக்களும் பணிபுரியும் அலுவலர்களும் இந்த மஞ்சள் நிற பூக்களை பார்த்து ரசித்து விட்டு செல்கின்றனர்

Conclusion:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போன்று மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இந்த மஞ்சள் நிற கொன்றைப் பூக்கள் பூத்துக் குலுங்கி கண்கொள்ளாக் காட்சி அளிக்கிறது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.