கொளக்காநத்தம் கிராமத்தில் சுகாதாரத் துறை சார்பில் நடைபெற்ற சுகாதார திருவிழாவில் கலந்துகொண்ட தொல். திருமாவளவன் எம்பி, விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மக்கள் அனைவரும் வளத்துடன் வாழ்வது அல்லாமல் நலத்துடன் வாழ்வதே சிறப்பு, குடும்பத்தை அதிகமாக பராமரிப்பது பெண்கள் என்பதால்... அவர்கள் உடல் நலத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கருவுற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அம்மா மகப்பேறு பெட்டகம், சஞ்சீவி பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த சுகாதாரத் திருவிழாவில் பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் மருத்துவம், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சித்த மருத்துவம் உட்பட பல்வேறு பரிசோதனைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்துகொண்டனர்.