பெரம்பலூர் மாவட்டத்தின் எளம்பலூர் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சத்யா. இவரது கணவர் கண்ணன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கண்ணன் குடித்துவிட்டு அடிக்கடி சத்யாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், இன்றும் (டிச.11) குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு, அடித்துள்ளார்.
![தற்கொலை செய்துகொண்ட பெண்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9842261_img.jpg)
இதனால், மன உளைச்சளில் இருந்த சத்யா வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் காவல் துறையினர், சத்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![தற்கொலையைக் கைவிடுக...](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9842261_img.png)
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறையினர், சத்யாவின் கணவர் கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு காரணமாக தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை!