ETV Bharat / state

'உதவியவரை உதைத்த உதவி ஆய்வாளர்' - காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர் - public sieged police station

பெரம்பலூர்: இளைஞரைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த இளைஞரின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குடும்பத்தினர்

author img

By

Published : Nov 8, 2020, 12:27 PM IST

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே இரூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி, வீரமணி ஆகிய இருவருக்கும் நிலத்தகராறு உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பாடலூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உதவி காவல் ஆய்வாளர் நிலத்தகராறு நடந்த இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது, வீரமணியின் தாயார் தங்களது வயலுக்கு அருகில் உள்ள தோட்ட உரிமையாளர் நல்லேந்திரனிடம், வீரமணிக்கு போன் செய்யும்படி கேட்டதாகக் கூறப்படுகிறது.

வீரமணியின் தாய்க்கு உதவ முயன்ற நல்லேந்திரனை எவ்வித முகாந்திரமுமின்றி காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலைக் கண்டித்தும், காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நல்லேந்திரனின் உறவினர்கள் பாடலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் நல்லேந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'இந்துக்கள் இந்து கடைகளிலேயே பொருட்கள் வாங்குவோம்' - போஸ்டரால் சர்ச்சை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.