பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் இராமலிங்கம் என்பவரிடம் மக்காச் சோளம் உரம் ( பாக்டாம் பாஸ்) வாங்கி பயிர்மீது தெளித்துள்ளனர்.
இந்த உரத்தை தெளித்ததால் மக்காச்சோளம் வளர்ச்சியடையவில்லை. பின்பு இது போலியான உரம் என்பது தெரிய வந்ததையடுத்து, அப்பகுதி காவல்நிலையத்தில் விவசாயிகள் புகாரளித்தனர்.
இதுதொடர்பாக, இராமலிங்கம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம், காவல்துறையினரின் இந்த அலட்சியத்தால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய அலுவலர்களிடம் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெரம்பலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் வரும்போது கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.