ETV Bharat / state

'தாய் மதம் திரும்பும்படி கூறவில்லை' - சீமான் மறுப்பு

author img

By

Published : Oct 20, 2021, 4:12 PM IST

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்கள், மீண்டும் இந்து மதத்திற்கு திரும்ப வேண்டும் என தான் ஒருபோதும் கூறவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான், seeman, ntk cheif coordinator seeman,
சீமான்

பெரம்பலூர்: நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் கடந்த மாதம் அவரது வீட்டில் தனியாக இருந்த போது, இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டது.

உயிரிழந்த வழக்கறிஞர் அருளின் நினைவேந்தல் நிகழ்ச்சி பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, உயிரிழந்த அருளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் சதி

அப்போது பேசிய அவர், "கிறிஸ்த்துவர்களும், இஸ்லாமியர்களும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி வாருங்கள் என்று நான் கூறியதாக சமுக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நான் எங்கேயும் அப்படி பேசவில்லை. பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் வேண்டுமேன்றே இது போன்று பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றனர்" என்றார்.

பெரம்பலூரில் சீமான் பேச்சு

தொடர்ந்து உயிரிழந்த அருளுக்கு புகழஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பாஜக ஒரு பாசிச கட்சி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.