ETV Bharat / state

'கரோனாவால் உயிரிழந்த வருவாய்த்துறையினருக்கு ரூ.50 லட்சம் வழங்குக'

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருவாய்த் துறையினர் போராட்டம்
வருவாய்த் துறையினர் போராட்டம்
author img

By

Published : Aug 5, 2020, 3:19 PM IST

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று (ஆகஸ்ட் 5), நாளை (ஆகஸ்ட் 6) தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில்,

'கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் உயிரிழந்த வட்டாட்சியர் கவியரசு உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்த இழப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சத்தை நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும்;

கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி கருணைத் தொகை ரூபாய் இரண்டு லட்சம் வழங்க வேண்டும் எனவும்;

அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் உயர் தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசம், கையுறை, கிருமிநாசினி வழங்க வேண்டும் எனவும்; அவரது குடும்பத்தினருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெட்டகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறையினர், குன்னம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.