ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல் துறை

பெரம்பலூர்: கரோனா தொற்று ஊரடங்கு சமயத்தில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துறையினர் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினர்.

அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல்துறை
அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல்துறை
author img

By

Published : May 12, 2020, 11:04 AM IST

கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த ஊரடங்கு காரணமாக தன்னார்லவர்கள், தொண்டு நிறுவனங்கள், பல்வேறு அமைப்பினர் நலத்திட்ட உதவிகளை அடித்தட்டு மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர் உயர் அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களான அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருள்களை வழங்கி வருகின்றனர்.

அத்தியாவசியப் பொருள் வழங்கும் காவல்துறை

மேலும் தற்போது மங்கள மேடு காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் உதவிகளை வழங்கினர். மாற்றுத்திறனாளிகளுக்கு காவல் துறையினர் உதவியது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய கே.என். நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.