பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் முதலமைச்சரின் சிறப்பு வரன்முறைப் படுத்தும் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா, குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன், பெரம்பலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.
![வீட்டுமனை பட்டாக்கள் வழங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pbl-02-patta-distribute-script-image-tn10037_20022021141407_2002f_1613810647_713.jpg)
பெரம்பலூர் வட்டத்தில் 252 நபர்கள், வேப்பந்தட்டை வட்டத்தில் 69 நபர்கள், குன்னம் வட்டத்தில் 42 நபர்கள், ஆலத்தூர் வட்டத்தில் 80 நபர்கள் என மொத்தம் 443 நபருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் கோட்ட துணை ஆட்சியர் பத்மஜா, பயனாளிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு - முதலமைச்சர் அறிவிப்பு