பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, மேட்டுப்பாளையம், சின்னாறு, எறையூர், திருமாந்துறை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களிலும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும் இன்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சென்றனர். பாதுகாப்பு காரணமாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையிலும் இன்று காலை சாலையில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவியது.
இதையும் படிங்க: கோவையில் 2 மணி நேரம் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிப்பு