பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பின்புறம்108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட அலுவலகம் உள்ளது. இதில், 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று (செப்டம்பர் 7) நடைபெற்றது.
இந்த முகாமில் பெரம்பலூர், அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கிராமங்களிலிருந்தும் வந்து பங்கேற்றனர்.
அவர்களிடம், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இந்த முகாமில் தேர்வுசெய்யப்பட்டவர்கள் பிறகு அறிவிக்கப்படுவார்கள் என அலுவலர்கள் தெரிவித்தனர்.