பெரம்பலூர் நகர காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எளம்பலூர் சாலையில் உள்ள ஓம்சக்தி ஏஜென்சிஸ் கடையில் சோதனை செய்தனர்.
அப்போது, தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த பொம்பலூரைச் சேர்ந்த குமார், பிரவீன் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து ரூ 50 ஆயிரம் மதிப்புள்ள போதைப்பொருள்களைப் பறிமுதல்செய்தனர். இது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.