நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை தயாரிப்பு மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்துவரும் மழையால் சிலை தயாரிப்புப் பணி தொய்வடைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் கொள்முதல்களும் குறைவாகவே வந்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தயாரிக்கப்படுவதாக சிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.